ஆடை, அணிகலன்கள் மற்றும் நவ நாகரிக பொருட்கள் உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் யாழ்ப்பாணத்தின் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலும்  Mewfashions.com  என்ற இணைய வர்த்தக சேவை தற்போது வாய்ப்புக்களை ஏற்படுத்தி இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் முதல் உற்பத்தியாளர்கள் வரை எல்லோருக்கும் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் வகையில்  Mewfashions.com  இன் சேவை அமைந்துள்ளது.

உலகின் எந்த மூலையில் நீங்கள் வாழ்ந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தே https://mewfashions.com/ இனூடாக யாழ்ப்பாணத்தில் இருந்து உங்களுக்கு வேண்டிய சகல விதமான ஆடைகளையும், நாகரிக பொருட்களையும் தரமாகவும் குறைந்த விலையிலும்  இனிமேல் பெற்றுக்கொள்ளலாம்.

அதேவேளை, உங்களுக்கு வேண்டியவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களின் திருமண மற்றும் பிறந்த தினங்களுக்கு தரமான புதுப்பொலிவுமிக்க நவ நாகரிக ஆடை அணிகலன்கள் மற்றும் பொருட்களை https://mewfashions.com/ இனூடாக அன்பளிப்புக்களாக  அனுப்பி மகிழ்ந்துகொள்ளலாம்.  

அத்துடன், வீட்டில் இருந்தபடியே உங்களுக்கு பிடித்தமான வகையில் உங்களுக்கு ஏற்ற அளவுகளில் வசீகரமாகவும் கவர்ச்சியாகவும் உங்களுக்கான ஆடைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற தையல் தொழிலாளர்களிடம் https://mewfashions.com/ இனூடாக  வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  

Mewfashions இல் நீங்கள்  வாடிக்கையாளர்கள் ஆவதன் மூலம் உங்கள் நவநாகரிக தேவைகளை பூர்த்திசெய்வது மட்டுமன்றி தாயக மக்களின் பொருளாதாரத்துக்கு நீங்கள் பங்களிப்பு செய்வதுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார தொழில் முயற்சிகளையும் ஊக்குவித்து ஆதரவளிக்கிறீர்கள். மானிப்பாய், கைதடி,  நீர்வேலி, திருநெல்வேலி, நெல்லியடி, வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் உள்ள ஆடை, அலங்கார தொழில் முயற்சியாளர்கள் Mewfashions இணைய வர்த்தகத்தில் இணைந்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் தமக்கு வேண்டியவற்றை பாதுகாப்பான முறையில் கொள்வனவுசெய்யும் வகையில் Paypal மூலமாகவும்  இலங்கை மற்றும் பிரித்தானியாவில் உள்ள வங்கிகளுக்கு நேரடியாக பணத்தை செலுத்துவதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன.